சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட விஜய் ரசிகர் விரட்டி விரட்டி தாக்கப்பட்டார்..! ஜெயிலர் திரையரங்கில் சம்பவம்

0 3624

ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விமர்சித்த விஜய் ரசிகரை விரட்டி விரட்டி வெளுத்த சம்பவம் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அரங்கேறி உள்ளது.

இனி சூப்பர் ஸ்டார்.... ரஜினி கிடையாது.., விஜய் தான்..! என்று கத்தி பேசிய விஜய் ரசிகரை விரட்டிச்சென்று குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் கதற கதற கும்மி எடுத்த காட்சிகள் தான் இவை..!

ரசிகர்கள் ஒரு பக்கம் ஜெயிலரை கொண்டாடி வரும் நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் கேக் வெட்டிய லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்களுடன் அமர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை கண்டு ரசித்தார். நடிகர் தனுஷ், ராகவாலாரன்ஸ் ஆகியோரும் தனியாக வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

தான் படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாக தெரிவித்த லதா ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் , இசையமைப்பாளர் அனிருத்,எல்லாரும் நன்றாக பண்ணி இருப்பதாக தெரிவித்தார்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் படம் பார்த்தனர். வெறித்தனமாக இருக்கிறது, பயங்கரமாக இருக்கிறது என்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தலைவர் பிரிச்சி கிழிச்சி தொங்க விட்டு விட்டதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

இசை அமைப்பாளர் அனிருத் , படம் மாஸாக இருப்பதாக தெரிவித்தார்

ஜெயிலர் படத்தின் 2 வது பாகத்திலும் நடிக்க தயாராக இருப்பதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தார்

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்துள்ள வசந்த் ரவி கூறுகையில் , ரஜினி சாருடன் நான் நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு . அது தற்போது நிறைவேறி உள்ளது என்றார்

ரஜினிதான் எப்போதும் சூப்பர்ஸ்டார் என்றார் ஸ்டண்ட மாஸ்டர் கனல் கண்ணன்

தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கால் தரையில் நிறகாத அளவுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments