சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
நில அளவையரை போலீஸார் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்

நில அளவையரை போலீஸார் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்
கடலூர் மாவட்டத்தில் நிலத்தை அளவிட சென்ற சர்வேயரை அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செருப்பால் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள சின்னபுறங்கணியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான சீத்தாபதிக்கும், சரவணன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சரவணன் தொடர்ந்த வழக்கில், நிலத்தை அளவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து காவல்துறை பாதுகாப்போடு நிலத்தை அளவிட அதிகாரிகள் சென்றனர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீத்தாபதி, நில அளவையர் மகேஸ்வரனை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Comments