ராட்சத அலையில் சிக்கி கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகு.. பாதி மூழ்கிய படகை பிடித்தப்படி கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு.. !!

அமெரிக்கா அருகே பாதி மூழ்கிய படகை பிடித்தப்படி 30 மணி நேரமாக கடலில் தத்தளித்த இளைஞனை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
புளோரிடாவைச் சேர்ந்த சார்லஸ் தனது 12 அடி நீள படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். 24 மணி நேரத்திற்கு மேலாகியும் கரைக்குத் திரும்பாததால் அச்சமடைந்த அவரது தந்தை கடலோர காவல்படையினருக்குத் தகவல் அளித்தார்.
அவர்கள் விமானம் மூலம் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். பாதி மூழ்கிய படகை பற்றியபடி கடலில் தத்தளித்த சார்லஸ் அவர்களை நோக்கி கை அசைத்தார். கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சார்லஸை கடலோர காவல்படையினர் படகில் சென்று மீட்டனர்.
ராட்சத அலையில் சிக்கி படகு மூழ்கத் தொடங்கியபோது, செல்போனும், லைப் ஜாக்கெட்டும் கடலில் அடித்து செல்லப்பட்டதாகவும், சுறா மீன்கள் வட்டமிட்ட சமயத்தில் கடலோர காவல்படையினர் வந்து மீட்டதாகவும் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Comments