தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் தகராறு.. சங்க உறுப்பினர்கள் தன்னை தாக்கியதாக ஜாக்குவார் தங்கம் குற்றச்சாட்டு

0 902

சென்னை, தியாகராயர் நகரில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜாக்குவார் தங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சச்சரவு நீடிப்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சந்தா கட்டாதது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை உள்ள நிலையில், உறுப்பினர்கள் சிலர் அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டு தகராறு செய்வதாக ஜாக்குவார் தங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார், இருதரப்பையும் எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போதும், ஜாகுவார் தங்கத்திற்கும் அச்சங்கத்தின் உறுப்பினர் சக்கரவர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments