பிடிக்க முயன்றபோது சாக்கடைக்குள் விழுந்த கஞ்சா போதை இளைஞர்.. குளிப்பாட்டி அழைத்துச் சென்ற போலீஸார்.. !!

புதுச்சேரியில், போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தப்பியோடிய இளைஞர் சாக்கடைக்குள் விழுந்து எழுந்து துர்நாற்றம் வீசும் சேறோடு நீதிபதி வீட்டிற்குள் புகுந்துக் கொண்டார்.
ஜீவா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கீழே 5 பேர் கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதை தடுப்பு பிரிவு போலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர்.
போலீஸாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடவே, அதில் ஒருவரான பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
எனினும், அங்கிருந்து எழுந்து சேறும் சகதியோடு அருகிலிருந்த நீதிபதி ஒருவரின் வீட்டிற்குள் சென்று புகுந்து கொண்டதாக தெரிகிறது.
பின்தொடர்ந்து சென்ற போலீஸார் அவரை குளிக்க வைத்து ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் 2 பேரை பிடித்த போலீஸார் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Comments