ஜூலை 30ல் விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-56.... ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக் கட்டப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்...!

0 1602

7 சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் வரும் 30ஆம் தேதியன்று பி.எஸ்.எல்.வி. - சி 56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஞாயிறு காலை 6.30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டி.எஸ். - எஸ்.ஏ.ஆர்.' என்ற செயற்கைகோள் பிரதான செயற்கோளாக அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் வானிலை தொடர்பான துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் திறன்கொண்டதாகும். இதனுடன், 23 கிலொ எடைகொண்ட வெலோக்ஸ் - ஏ.எம். (Velox-AM ) என்ற மைக்ரோ செயற்கைக்கோளும், ஸ்கூப் - 2 என்ற நானோ செயற்கைகோளும் செலுத்தப்பட உள்ளன.

மேலும், நியூலியான் (NuLIoN) என்ற இணைய சேவைக்கான நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கடந்த 14ஆம் தேதியன்று சந்திரயான் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ 2 வாரங்களில் வணிக ரீதியில் தற்போது பி.எஸ்.எல்.வி.யை ஏவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments