மலேசியாவில் திருமா பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்..! தமிழ் தேசிய சர்ச்சை..!

0 11144

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் தேசிய  மாநாட்டில்  பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் 11-வது உலகத் தமிழர் தேசிய மாநாடு நடந்து வருகிறது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் தேசியம் குறித்து பேசும்போது தமிழ் தேசியம் என்ற பெயரில் இனவாதம், மதவாதம் கூடாது என்று அறிவுறித்தினார்.

திருமாவளவன் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கிய சில வினாடிகளில் டேய்.. நிப்பாட்ரா... என்று சிலர் திருமாவளவனுக்கு எதிராக குரல் கொடுத்தனர். பேசிய தலைப்பே சரியில்லை என்று சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தவர்களை சமாதானப்படுத்தினர். எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்.

இந்த சலசலப்புகளுக்கு இடையே, மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட திருமாவளவன் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments