எல்லாரும் சிம்பு ஆக முடியுமாடா...? உதட்டு முத்தத்தால் பஞ்சரான நாக்கு...!

0 5084
எல்லாரும் சிம்பு ஆக முடியுமாடா...? உதட்டு முத்தத்தால் பஞ்சரான நாக்கு...!

குடும்ப தகராறில் மனைவியை சமாதானப்படுத்த உதட்டில் முத்தம் கொடுத்த கணவர் ஒருவர், தன் பெயரைக்கூட தெளிவாக உச்சரிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாரா சந்த், இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் இருவரும் அடிக்கடி சிறுசிறு பிரச்சனைகளுக்காக கூட சண்டையிட்டு கொள்வதும், சமாதானமாவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திட்டிக் கொண்டிருந்த தனது மனைவியை சமாதானம் செய்வதற்காக புதிய யுக்தி ஒன்றை தாராசந்த் கையாண்டுள்ளார்.

தனது மனைவியின் முகத்தை பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார் நம்ம ஊர் சிம்பு நடித்தது போல..!

அடுத்த நொடியே காண்டான புஷ்பா, கணவர் தாராசந்தின் நாக்கை பலம் கொண்ட மட்டும் தனது பல்லால் கடித்து இழுத்துள்ளார்.

இதில் அவரது நாக்கு சிதைந்து தொங்கியதால், பேச இயலாமல் ரத்தம் சொட்ட.. கத்திக் கதறியபடியே மருத்துவமனையை நோக்கி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார்

வலியால் துடித்த 'மன்மதன்' தாரா சந்தின் நாக்கில் தையல் போட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரித்த போது, தனக்கு விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்ததால் நாக்கை கடித்து இழுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments