சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
நள்ளிரவில் மதுபோதையில் அதிவேகமாக சென்ற கார்.. மின் விநியோகப் பெட்டியில் மோதி பலஅடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார்.. !!
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட கார் நிலைதடுமாறி சாலையோர மின் விநியோகப் பெட்டியில் மோதியதில் அருகில் நின்றிருந்த பைக்குகள் தீப்பற்றி எரிந்தன.
வில்லியனூரைச் சேர்ந்த ஆறு பேர் புதுச்சேரி சென்று மது அருந்திவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார், நள்ளிரவு ஒன்றரை மணியளவில் வழுதாவூர் அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் விநியோகப் பெட்டியில் மோதியதுடன், அருகில் நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி பல அடி தூரத்துக்கு இழுத்துச் சென்றது.
இதில் மின் விநியோகப் பெட்டியில் ஏற்பட்ட தீப்பொறியானது இருசக்கர வாகனங்களுக்குப் பரவி, 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
Comments