ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. கணக்கில் வராத ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்.. !!

0 9301

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 4 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 சென்ட்டிற்கு கீழ் இருக்கும் நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

இந்நிலையில் இங்கு 3 சென்ட்,7 சென்ட், 10 செண்ட் நிலங்களுக்கு அதிகாரிகள் பத்திர பதிவு செய்து கொடுத்து கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், அங்கு நேற்று மாலை 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 5 லட்சத்து 4ஆயிரம் பணம் கட்டுக்கட்டாக
கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் சகிலா பேகம் மற்றும் தரகர் மருது ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments