பிரதமர் மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது போன்ற ஒரு நிகழ்வையாவது முதலமைச்சரால் குறிப்பிட முடியுமா? - அண்ணாமலை

0 3375

இலங்கை விவகாரத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வு கொண்டு வரும் போது, அதற்கு தி.மு.க. ஸ்ட்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதாக பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம், கடந்த கால தவறுகளின் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

51 ஆயிரம் வீடுகள், காங்கேசன்துறை துறைமுகத்தை தமிழகத்துடன் இணைக்க கப்பல் வசதி, சென்னையில் இருந்து விமானப் போக்குவரத்து வசதி என இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி ஏராளமான நலப்பணிகள் செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது போன்ற ஒரு நிகழ்வையாவது முதலமைச்சரால் குறிப்பிட முடியுமா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments