கட்சிக் கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி.. !!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின் வலது சாரி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், புதன்கிழமை பொகோடா என்ற இடத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்திற்காக, சிறிய ரக விமானத்தில் சென்றனர்.
சான் லூயிஸ் டி காசினோ என்ற பகுதியில் சென்ற போது விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments