மணிப்பூர் சம்பவத்தால் இதயம் முழுவதும் வேதனையும், கோபமும் நிறைந்துள்ளது - பிரதமர் மோடி

0 2131

மணிப்பூர் சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டம், ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது, எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான செயல் என்றார். மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவத்தால் தனது இதயம் முழுவதும் வேதனையும், கோபமும் நிறைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என்றும், மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடூரத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் அனைவரும், மக்களின் நலனுக்காக தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments