ராஜஸ்தானில் காதலன் கண்முன் சிறுமி கூட்டு பலாத்காரம்... கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது...!

ராஜஸ்தானில் தலித் சிறுமியை, அவரது காதலன் முன்னிலையில் 3 கல்லூரி மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அஜ்மீரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது காதலனுடன் ஜோத்பூருக்கு பேருந்தில் சனிக்கிழமை இரவில் வந்து சேர்ந்தார். அங்குள்ள தங்கும் விடுதியில் அறை கேட்கச் சென்ற போது விடுதியின் பராமரிப்பாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.
அங்கிருந்து வெளியேறிய இருவரும் அறை கிடைக்காமல் தடுமாறியபோது, அவர்களுக்கு உதவி செய்வதாக 3 கல்லூரி மாணவர்கள் அணுகினர்.
அவர்களை நம்பி சிறுமியும், காதலனும் சென்ற நிலையில் அதிகாலையில் அவர்களை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு மைதானத்தில் வைத்து காதலனை தாக்கி விட்டு 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி காதலன் அளித்த புகாரின்பேரில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட மூவரையும் கண்காணிப்பு கேமரா மூலமாக தேடிய போது ஜோத்பூர், கணேஷ்புரத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது தப்ப முயன்ற இருவரின் காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் 3 கல்லூரி மாணவர்களையும், விடுதி பராமரிப்பாளரையும் போலீஸார் கைது செய்தனர்
Comments