வடமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய 75,000 லாரிகள் தமிழகத்தில் நிறுத்தி வைப்பு.. காரணம் என்ன..?

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு செல்ல வேண்டிய 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த லாரிகள் டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. லாரிகளில் தேங்காய், சாக்கு, ஸ்டார்ச், சுகாதார மருந்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் வடமாநிலங்களில் மழை நீடிப்பதால் அங்கிருந்து வரவேண்டிய 25 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த லாரிகளில் ஆப்பிள், இயந்திரங்கள், ஜவுளி பொருட்கள் போன்ற பொருட்கள் தேங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments