அன்புமணின்னா அமைதியா போவார்ன்னு நெனச்சியா...? செய்தியாளரை தெரிக்க விட்டார்... வன்மத்தை கக்குவதாக சாடல்...!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது கண்டு தங்களுக்கு பயமில்லை என்று கூறிய அன்புமணி, பா.ம.கவை சாதிக்கட்சி என்று கூறிய செய்தியாளரை நோக்கி வன்மத்தை கக்குவதாக கூறி கேள்விகளால் வறுத்தெடுத்தார்
விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அரசியல் கட்சிகள் பயப்படுவதாக சீமான் கூறியது குறித்து அன்புமணியிடம் ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு அவர் அருகில் நின்ற கட்சியினரிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா ? என்று கேட்டு கலாய்த்ததுடன் தாங்கள் பயப்படவில்லை என்று கூறினார்
மாமன்னன் படம் பார்க்காதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர் , பா.ம.கவை சாதிக்கட்சி என்று குறிப்பிட்டதால் ஆவேசமான அன்புமணி, தாங்கள் செய்த சாதனைகளை கூறி , அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அந்த செய்தியாளரின் வாயை அடைத்தார்
Comments