நடந்து சென்ற ஆசிரியையிடம் செயினை பறித்து தப்பியவரை விரட்டிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...!

சங்கரன்கோவிலில் தெருவில் நடந்து சென்ற பெண் ஆசிரியரை தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் தபசு நகரை சேர்ந்த முத்துலட்சுமி கோயிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞன் ஒருவன் ஐந்து சவரன் சங்கலியை பறித்துக் கொண்டு, ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு ஓடினான்.
முத்துலட்சுமி சத்தமிட்டதை அடுத்து அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பின்தொடர்ந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டவனை பிடித்து தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்தனர். பொன்ராஜ் என்ற அந்த நபரை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்தனர்.
Comments