மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 25பேர் உடல் கருகி பலியானார்கள்.
மேலும் 7பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்ருத்தி மகாமார்க் அதிவிரைவுச் சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். தீயணைப்புத்துறையினரும் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments