கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்ராய் மீது எழுந்த புகாரையடுத்து லோக் ஆயுக்தா எஸ்.பி. தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
குடகு, சிக்மளூர், பெலகவி, கோலார் உள்ளிட்ட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணமும், சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments