அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவு பட்டியலில் மாற்றம்...!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் 2 நாட்கள் உப்புமா, 2 நாட்கள் கிச்சடி, ஒருநாள் பொங்கல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன உணவை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாணவ மாணவியருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் தானியம் மற்றும் காய்கறிகள் வழங்க வேண்டுமெனவும், சமைத்த பின் உணவு 150 முதல் 200 கிராம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments