விவசாயிகளின் குறையை தீர்க்காமல் அலட்சியமாக சமையல் குறிப்பு மற்றும் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள்..!

வேலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.
அப்போது, அதிகாரிகள் சிலர் செல்போனில் மும்முரமாக சமையல் வீடியோக்களும் ரீல்சும் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
Comments