பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை....!

0 1156

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்றதாக பயங்கரவாதிகள் 4 பேரை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

குப்வாராவின் காலா வனப்குதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவமும் போலீசாரும் விரைந்து சென்றனர்.

அவர்களை நோக்கி ஊடுருவ முயன்றவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய ஊடுருவல் முயற்சி இது என்றும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில், ராணுவத்துடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களில் பல்வேறு ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments