மெக்சிகோவில் 16 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து...5 பேர் பலி... 14 பேர் படுகாயம்

0 1364

மெக்சிகோவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டெபாடிட்லான் நகருக்கு அருகில் நேற்று ஆறு வேன்கள், நான்கு கார்கள், நான்கு ட்ராக்டர்கள் உட்பட 16 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றின.

இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து எவ்வாறு நேர்ந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments