RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

BIG STORIES

oyo அறையில் அலறல்... 17 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்..! உல்லாச முறிவால் ஆவேசம்

Jun 11, 2025 07:39 AM

373

oyo அறையில் அலறல்... 17 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்..! உல்லாச முறிவால் ஆவேசம்

oyo அறையில் அலறல்... 17 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்..! உல்லாச முறிவால் ஆவேசம்

பெங்களூருவில் ஹோட்டலுக்கு அழைத்து சென்று பெண்னை 17 முறை கத்தியால் இளைஞர் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் ஹரிணி (36) இவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நன்றாக போய் கொண்டிருந்த ஹரிணியின் வாழ்க்கை பயணம் கோயில் திருவிழா ஒன்றில் திசை மாறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கு, தலகட்டபுராவை சேர்ந்த 25 வயதாகும் யசஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். யசஷ் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

அதைத்தொடர்ந்து, 2 பேரும் அடிக்கடி செல்போனில் நண்பர்களாக பேசிவந்த நிலையில், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் ஓயோ மூலம் ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்து 2 பேரும் அடிக்கடி உல்லாசமும் அனுபவித்ததாக கூறப்படுகிறது. மனைவி ஹரிணியின் காதல் ஒரு கட்டத்தில் தாசேகவுடாவுக்கு தெரியவந்ததையடுத்து ஹரிணியை அவர் கடுமையாக கண்டித்ததுடன், அவரிடமிருந்து இருந்து செல்போனையும் வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஹரிணியை அவரது காதலன் யசஷால் தொடர்பு கொள்ள முடியாமல், அவரை பார்க்க முடியாமல் போனதால் யசஷ் வேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், நடந்த சம்பவங்களுக்கு தனது கணவரிடம் மன்னிப்பு கேட்ட ஹரிணி, அந்த இளைஞருடன் பேச மாட்டேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

இதையடுத்து, ஹரிணியிடம், கணவர் தாசேகவுடா மீண்டும் செல்போனை கொடுத்துள்ளார். ஆனாலும் காதலன் யசஷ் உடனான தொடர்பை கைவிட முடியாததால், அவரை ஹரிணி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜூன் 6ஆம் தேதி கெங்கேரி அருகே பூர்ணபிரஜா லே-அவுட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் இவரும் சந்தித்து பேசுவதற்கு 2 பேரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து யசஷ் அந்த ஹோட்டலில் அறை முன்பதிவு செய்திருக்கிறார். சம்பவத்தன்று 2 பேரும் ஹோட்டலுக்கு சென்று, அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இந்த உறவை நிறுத்திக் கொள்வது குறித்து ஹரிணி பேசியதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத யசஷ், ஹரிணியிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யசஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிணியை கண்மூடித்தனமாக 17 முறை குத்தியாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே ஹரிணி உயிரிழந்தார்.

பின்னர் ஹோட்டலிலிருந்து யசஷ் தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் யசஷ் முன்பதிவு செய்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், கதவை திறந்து பார்த்தார்கள். அப்போ ஹரிணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சிடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிணியை அவரது காதலன் யசஷ் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், யசஷை கைது செய்து, அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies