RECENT NEWS

முருகன் மாநாட்டை அரசியலாக்குவது தவறு - சரத்குமார்

இந்தியா

பியூட்டி போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்ற தமிழ்நாட்டு ரயில் இன்ஜின்கள்!

Jun 11, 2025 05:04 AM

163

பியூட்டி போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்ற தமிழ்நாட்டு ரயில் இன்ஜின்கள்!

விபத்து நேர்ந்தால், அதன் காரணத்தை கண்டறிய விமானத்தில் இருப்பது போல், புழுதி பறக்க புயல் போல் புறப்பட்டு செல்லும் ரயில் இன்ஜினில் கருப்பு பெட்டி பொருத்தப்பட்டு, பியூட்டி போட்டியில் முதல் பரிசை வென்ற ரயில் இன்ஜினின் சிறப்பம்சம் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு... 

வரலாற்று சிறப்புமிக்க ரயில் இன்ஜின்களின் பராமரிப்பு பணிக்கு பெயர் போன ராயபுரம் பணிமனையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட ரயில் இன்ஜினை மேம்படுத்த பொறியியல் பிரிவினர் திட்டம் வகுத்தனர்.

அந்த வகையில், ரயில் ஓட்டுநர்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல், முன் பக்கத்தில் தடுப்புக்கு மத்தியில், இரு கண்ணாடிகளை கொண்ட ரயில் இன்ஜினின் காதை கிழிக்கும் சத்தத்துடன் இரவு, பகல் பாராமல் லோகோ பைலட்டுகள் ரயிலை இயக்கி வந்தனர்.

அந்த வகையில், சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அதே கேபினை புதிய டிஜிட்டல் வடிவில் மேம்படுத்த, ராயபுரம் லோகோ பணிமனை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர்.

மிகவும் நேர்த்தியாக சிறப்பான தொழில் நுட்பத்தை கையாண்ட பொறியியல் பிரிவினர், குளிர் சாதன வசதி, வேகத்தை காட்டும் டிஜிட்டல் மீட்டர், பிரேக் சிஸ்டம், அகண்ட முன் பக்க கண்ணாடி, அசதி, அழுத்தம் இல்லாமல் இருக்க, ரயில் ஓட்டுநர்களுக்கு தசைகளை சீராக வைக்க உதவும் இருக்கை, கழிவறை போன்ற சிறப்பான வசதிகளை உருவாக்கினர். ரயில் வளைவில் செல்லும்போது, தொடர்ச்சியான ரயில் பெட்டிகளை கண்காணிக்க முன்னும் பின்னுமாக சிசிடிவி கேமரா, இதையும் தாண்டி விபத்து நேர்ந்தால், அதன் முக்கிய காரணத்தை கண்டறியக் கூடிய கருப்பு பெட்டி வசதியுடன், ராயபுரம் பணிமனையில் நேர்த்தியாக
புனரமைக்கப்பட்டது.

இந்த ரயில் இன்ஜின் ஆனது, இந்தியா முழுக்க உள்ள 16 மண்டலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 19 ரயில் இன்ஜின்கள், கடந்த மாதம் 24 ஆம் தேதி, வாரணாசி பனாரசில் நடைபெற்ற பியூட்டி போட்டியில் கலந்து கொண்டதில், ராயபுரம் பணிமனை பராமரிப்பு பிரிவில் மேம்படுத்தப்பட்ட ரயில் இன்ஜின் முதல் பரிசினை வென்றுள்ளது.

நெடுந்தூர பயண கனவுகளுடன் இருக்கையிலும், படுக்கையிலும் பயணிக்கும் ரயில் பயணிகளை இழுத்து கொண்டு அளவில்லா, முடிவில்லா பயணத்தில் முதல் பரிசை தட்டித் தூக்கிய இந்த ரயில் இன்ஜின், உண்மையாகவே பியூட்டி தான் என பலரும் வர்ணிக்கிறார்கள்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சட்டம் ஒரு பளார் அறை..! பாலியல் புகாரில் சிக்கிய சந்துருவுக்கு நடந்தது என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies