கூட்டாளியை சுட்டுக்கொன்று கடலில் வீசிய வழக்கில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கைது..!
கூட்டாளியை சுட்டுக்கொன்று சென்னை நீலாங்கரை கடலில் வீசிய வழக்கில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான செந்தில் என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் மனைவி லட்சுமி, கணவரை காணவில்லை என விருதுநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் மாயமான செந்திலின், செல்போன் அழைப்பு விவரங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை செந்தில் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து வரிச்சியூருக்கு விரைந்த விருதுநகர் போலீசார், அங்கேயே முகாமிட்டு இரு நாட்களாக செல்வத்திடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வரிச்சிசூர் செல்வம் கூட்டாளிகளுடன் சேர்ந்து செந்திலை சுட்டுக் கொன்று சடலத்தை சென்னை நீலாங்கரை கடலில் வீசியது தெரியவந்துள்ளது.
Comments