அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஐந்துநாள் பயணமாக இன்று புறப்படுகிறார் பிரதமர் மோடி..!

அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஐந்துநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்.
நாளை சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐநா.சபை தலைமையகத்தில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.
வியாழக்கிழமையன்று அதிபர் ஜோ பைடன் அவரின் மனைவி ஆகியோர் அளிக்கும் விருந்தில் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார்.
23ம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலாஹாரிசுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் மோடி சந்திக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து 24ம் தேதி எகிப்து அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் தமது பயணத்தைத் தொடர உள்ளார்.
Comments