கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு மகனை கொடூரமாக கொலை செய்த தாய் கைது...!

0 30910

திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த மகனை ஆண் நண்பரை ஏவி கொன்ற தாயை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அண்ணநகர் பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் சுப்புலட்சுமி தம்பதிக்கு கணேஷ் என்ற மகனும், மகளும் இருந்த நிலையில், சுப்புலட்சுமி உறவினரான சுடலைமணி என்பவருடன் ஆறு ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று  வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகன் கணேஷ் சில நாட்களுக்கு முன்பு சுடலைமணியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, தாயின் தகாத உறவை கண்டித்துள்ளார்.

இதனையடுத்து, சுப்புலட்சுமியின் ஏவலின் பேரில், நேற்று இரவு இரண்டு பேருடன் சென்ற சுடலைமணி டி.எம்.பி. காலனி அருகே  இருசக்கர வாகனத்தில் சென்ற கணேஷை ஓட ஓட விரட்டி  வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கணேஷின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்த 30க்கும் மேற்பட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.

சுடலைமணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments