வீட்டுவாசலில் பேசிக் கொண்டிருந்த தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு... பக்கத்து வீட்டு இளைஞர் வெறி செயல்..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டு வாசலின் முன்பு பேசிக் கொண்டிருந்த தாய், மகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காடுபட்டி பகுதியில் வசிக்கும் உமா என்பவர் அவரது மகன் செல்லப்பாண்டியுடன் அவர்களது வீட்டின் முன்பு சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டு இளைஞர் செந்தில்குமார் என்பவர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில் செந்தில்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உமா, செல்லப்பாண்டி இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளார்.
காயமடைந்த இரண்டு பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், செந்தில்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments