ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்து சென்ற ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு

0 2718

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பி.எஸ்.க்கு பல பதவிகளை கொடுத்து அழகு பார்த்த கட்சி அதிமுக என்றும், கட்சி அலுவலகத்தின் கதவை அவரது ஆதரவாளர்கள் உடைத்ததால் தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறினார். அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பணம் ஏதும் எடுத்து சென்றார்களா என்பது விசாரணையில் தெரியவரும் எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments