சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு... கனிமவள லாரிகளை சோதனை செய்யாமல் அனுப்பிய காவலர்களை எச்சரித்த அமைச்சர் மனோ தங்கராஜ்..!

0 1482

கன்னியாகுமரி களியக்காவளை சோதனைச்சாவடியில் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், கனிம வள லாரிகளை சோதனை செய்யாமல் அனுப்பிய காவலர்களை கடுமையாக எச்சரித்தார்.

நேற்றிரவு அமைச்சர் மனோ தங்கராஜ் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அதிகளவில் கனரக வாகனங்கள் கேரளாவுக்கு செல்வதற்காக வரிசைக்கட்டி நிற்பதை பார்த்துள்ளார்.

உடனடியாக களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு சென்ற அமைச்சர், அங்கிருந்த காவலரிடம் இது குறித்து விசாரித்தார். 

அப்போது, கனிம வளம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு முறைப்படி உரிமம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யாமல் காவலர்கள் அனுப்புவதை அறிந்து கோபமடைந்த அமைச்சர், அவர்களை கடுமையாக எச்சரித்தார்.

பின்னர், கனிம வள லாரிகளை மடக்கிப் பிடித்து போக்குவரத்தை சீர் செய்ய காவலர்களுக்கு உத்தரவிட்ட அமைச்சர், மாவட்ட எஸ்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments