விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, யூரியாவுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும், டி அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாயும் அரசு செலவிடும் என தெரிவித்தார்.
மேலும், அனைத்து முக்கிய உரங்களுக்கான இருப்பு தேவையான அளவில் இருப்பதாகவும், நாட்டில் உரத்தின் விலை உயராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் உரங்களின் விலை சற்று குறைந்துள்ளத்தாகவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
Comments