டெல்லியில் யாருக்கு அதிகாரம்..? உண்மையான நிர்வாக அதிகாரம் அரசிடமே இருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

0 1113

ஜனநாயக ஆட்சி முறையில், உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அரசுக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்த சூழலில், டெல்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக 2019ல் மத்திய அரசு சில சட்டத்திருத்தங்களை செய்தது.

இதனை எதிர்த்து டெல்லி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதில், நீதிபதி அஷோக் பூஷண், டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என 2019ல் தீர்ப்பளித்திருந்தார்.

இதனால் வழக்கு, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது.

2019ல் நீதிபதி அசோக் பூஷண் வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு வழங்கப்படாதது தவறு என்றும், அதிகாரிகள், அமைச்சர்களிடம் தகவல் அளிப்பதை நிறுத்தினாலோ அல்லது அவர்களின் உத்தரவுகளை மதிக்காவிட்டாலோ கூட்டுப் பொறுப்புக் கொள்கை பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments