ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி தொழில் அதிபரிடம் மோசடி.. 3 முக்கிய குற்றவாளிகள் கைது!

0 3232

100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்து 4 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்  ஷியாமல் சட்டர்ஜி.தொழில் அதிபரான இவர் தனது  நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்ட நிலையில் தரகர்கள் மூலம் அறிமுகமான சென்னை, ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த  East Coast Properties  நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார்.

அவர்கள் பாதுகாப்பு பத்திரம் இல்லாமல் 100 கோடி கடன் பெற்று தர 6 மாத வட்டி தொகையான 4 கோடியை முதலில் தர வேண்டும் என கூறியுள்ளனர்.இதனை நம்பி பணத்தை கொடுத்த ஷியாமல் சட்டர்ஜியை ஏமாற்றிய மோசடி கும்பல் தலைமறைவாகி விட்டது.

இது குறித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே 3 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments