இங்க ஒத்த ஆளு... அங்க பத்துபேரு..! ஏற்றிய இரண்டு காரு..! பிபிஜிடி சங்கரின் கடைசி நிமிடங்கள்..!

0 3830

பா.ஜ.க பிரமுகர் பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உயிர் தப்பிக்க ஓடி , கத்தியுடன் போராடியவரை, கொலையாளிகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்ததுடன் அவர் மீது இரு கார்களை ஏற்றிச்சென்றதும் தெரியவந்துள்ளது.

பா.ஜ.க பிரமுகரும், ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவருமான பிபிஜிடி சங்கர் கடந்த 27ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சரண் அடைந்த 9 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சம்பவத்தன்று முதலில் கார் மீது வெடிகுண்டு வீசி மறித்த மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய சங்கரை , கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், கட்சி கொடி கட்டிய இரு கார்களில் கொலையாளிகள் விரட்டிச் செல்கின்ற காட்சி அதிர வைப்பதாக உள்ளது.

தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை காரில் விட்டுச்சென்ற சங்கர், கையோடு எடுத்துச்சென்ற கத்தியை வைத்து தன்னை தாக்க வந்தவர்களை திருப்பி தாக்க முயன்றதாக கூறப்படுகின்றது. இதனால் அவரை வெட்ட இயலாமல் கொலையாளிகள் விலகி நின்று சுத்து போட்ட நிலையில், கொலைக் கும்பல் ஓட்டி வந்த கார் அவரை பின் பக்கமாக இடித்து தள்ளியது.

அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் சங்கரை சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு கொலையாளிகள் தங்களது இரு கார்களில் ஏறித்தப்பி உள்ளனர்.

கொலையாளிகளில் ஒருவன்,தவற விட்ட அரிவாளை திரும்ப வந்து எடுத்துக் கொண்டு காரில் ஏறியதும் அந்த இரு கார்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சங்கரின் சடலத்தின் மீது ஏற்றி இறக்கி ஓட்டிச்சென்ற காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் சினிமாவில் வருவது போல  பல பேர் முன்னிலையில் அரங்கேறிய நிலையில், சிசிடிவியில் உள்ளவர்களுக்கும் , கொலை தொடர்பாக சரண் அடைந்தவர்களும் ஒரே குழுவினரா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக குன்றத்தூரை சேர்ந்த ரவுடி ஒருவரை கடந்த 7 நாட்களாக விசாரித்த போலீசார் வெளியூர் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவித்து அனுப்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments