வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவித்த பெண் மீட்பு... மீட்க வந்த போலீசாரைக் கண்டதும் பெண் கதறி அழுத காட்சி

0 13532
வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சிக்கித் தவித்த பெண் மீட்பு... மீட்க வந்த போலீசாரைக் கண்டதும் பெண் கதறி அழுத காட்சி

ஆஸ்திரேலியாவில் வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று 5 நாட்களாக சிக்கித் தவித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

லில்லியன் என்ற 48 வயது பெண் சுற்றுலா சென்ற போது, வழிதவறி காட்டுக்குள் சென்ற நிலையில், அவரது கார் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. செல்போனில் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

உடல்நலம் சரியில்லாததால் நடந்து சென்று கூட அங்கிருந்து வெளியேற முடியாத லில்லியன், தன்னிடம் இருந்த சில குச்சி மிட்டாய் மற்றும் ஒரு பாட்டில் மதுபானத்தை பருகிக் கொண்டு 5 நாட்களாக காட்டுக்குள்ளேயே இருந்துள்ளார்.

லில்லியனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அவரை தேடி வந்த போலீசார், ட்ரோன் கேமரா மூலம் அவர் காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். தன்னை மீட்க போலீசார் வந்ததைக் கண்டதும், லில்லியன் உணர்ச்சி பெருக்கில் கதறி அழுத வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments