50 அடி தூரத்திற்கு பறந்து பைக்கில் சென்ற மாணவரின் காலை தாக்கிய சிலிண்டர்.. கோவையில் நடந்தது என்ன?

0 3872

கோவை குனியமுத்தூரில், இரும்புக் கடையில் எடைக்கு போட எடுத்து வரப்பப்பட்ட சிறிய வகை தீயணைக்கும் சிலிண்டர், சுமார் 50 அடி தூரத்திற்கு பறந்துச் சென்று பைக்கில் சென்ற மாணவரின் காலை தாக்கியது.

குனியமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் சேலத்தை சேர்ந்த அருண், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூர்- பாலக்காடு சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். சாலையின் வலது புறத்தில் உள்ள குமார் என்பவரின் இரும்புக் கடையிலிருந்து பறந்து வந்த சிறிய அளவிலான தீயணைப்பு சிலிண்டர் அவரது காலில் வந்து மோதியதில் மாணவருக்கு கால் முறிந்தது.

சிலிண்டரை எடைக்கு போட எடுத்து வந்தவர் கவனக்குறைவாக அதன் மேல் மூடியை திறக்க முயன்ற போது சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறி, அழுத்தத்தின் காரணமாக உருளை எதிர்திசையில் பறந்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments