மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வழிப்பறி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்..!

0 2683

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்டத்தில் ஆயுதங்களுடன் புகுந்து பக்தர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பதினைந்து பேர் கொண்ட கும்பலை மதிச்சியம் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இன்று காலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கடையொன்றில் நின்றுக் கொண்டிருந்தவரிடம் ஆயுதங்களுடன் வந்த கும்பல் வழிப்பறி செய்தபோது, அதை தடுக்க முயன்றவர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு வழிபறி கும்பல் தப்பியோடியது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழிபறி கும்பலைச் சேர்ந்த 15 பேரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். வழிபறி கும்பல் தாக்கிய ஏழு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், வழிபறி கும்பலிடம் நடத்திய விசாரணையில், திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி நேற்று இரவு முதல் பல்வேறு செல்போன் மற்றும் தங்க நகைகளை வழிப்பறி செய்தது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, மற்றொரு வழிபறி கும்பலைச் சேர்ந்த சூர்யப்பிரகாஷ் என்ற நபரை மதிச்சியம் பகுதியில் தலையில் காயம், கழுத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்டுள்ள போலீசார், இவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments