நியூயார்க்கில் ஓடும் ரயிலில் கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்துக் கொலை..!

0 2067

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓடும் ரயிலில் கறுப்பின இளைஞரை, 3 வெள்ளை இன இளைஞர்கள் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

வடக்கு நோக்கிச் சென்ற எஃப் ரயிலில் பயணித்த சுமார் 30 வயது இளைஞர் சக பயணிகளிடம் கோபத்தில் கத்தியவாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை ஒருவர் பின்னாடியிருந்து கழத்தை நெரித்தவாறு மடக்கிப் பிடித்து கீழே தள்ளி விடவும், மற்ற 2 பேர் அவரது கைகளை பிடித்துக் கொண்டனர்.

பயணி ஒருவர் இக்காட்சிகளை பதிவு செய்த நிலையில், பிராட்வே-லாஃபாயெட் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தது. அங்கு வந்த போலீசார் தாக்குதலுக்கு உள்ளானவரை பரிசோதித்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. உயிரிழந்தவர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments