அறுந்து விழுந்த மின்கம்பி - மின்சாரம் தாக்கி வயதான தம்பதி பலி..!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி வயதான தம்பதி உயிரிழந்தனர்.
மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் - சம்பூரணம் தம்பதி குடிசை வீட்டில் வசித்து வந்தனர். பேராவூராணி பகுதியில் நேற்றிரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இவர்களது வீட்டு வாசலில் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் உடையப்பன், அறுந்து கிடந்த மின்கம்பியை இருளில் கவனிக்காமல் மிதித்ததில் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
முதியவரின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற மூதாட்டி சம்பூரணம், அவரை காப்பற்ற முயற்சித்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Comments