துபாய் தொழில் அதிபரால் கொடுமைகளை சந்தித்த சின்னத்திரை நடிகை ஷாலினி..! டிவோர்ஸ் போட்டோ ஷூட் கொண்டாட்டம்

0 22308

துபாய்க்கு நடனமாடச்சென்ற இடத்தில் காதலில் விழுந்து தொழில் அதிபரை திருமணம் செய்த சின்னத்திரை நடிகை ஒருவர், தன்னை ஏமாற்றிச்சென்ற கணவரை, விவாகரத்து செய்ததாக கூறி கணவனின் புகைப்படங்களை கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் போட்டோ சூட் நடத்தி கொண்டாடிய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

காதல் கணவனின் புகைப்படத்தை கிழித்தும்... படத்தை காலில் போட்டு மிதித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டவர் சின்னத்திரை நடிகை ஷாலினி ..!

சென்னையை சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஷாலினி, முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் துபாய்க்கு நடனமாட சென்றுள்ளார். அங்கு வைத்து தன்னை தொழில் அதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ரியாஸ் என்பவரின் காதல் வலையில் விழுந்துள்ளார். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட ரியாஸ் முதலில் ஷாலினியை திருவேற்காடு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் தனது மதத்திற்கு மாற்றி முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு பின்னர் துபாயிலும் சென்னையிலும் ஷாலினியுடன் குடித்தனம் நடத்திய ரியாஸ், மது போதையில் அவரை பலமுறை அடித்து காயப்படுத்தியதாகவும், காரில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டுச்சென்ற கொடுமைகள் எல்லாம் நடந்ததாக கூறப்படுகின்றது. இதனால் இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஷாலினிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் வீட்டுக்கு வருவதை குறைத்தும் கொண்ட ரியாஸை தேடி ஷாலினி கும்பகோணம் சென்றுள்ளார், அங்கிருந்த ரியாஸின் முதல் மனைவி மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ரியாஸ் முதல் மனைவியை பிரியாமல் ஷாலினியை திருமணம் செய்ததால், இவர்களின் திருமணம் செல்லாது என்று உறவினர்கள் பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஷாலினி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் , துபாய்க்கு சென்ற ரியாஸ் 3 வதாக வேறு ஒரு நடிகையுடன் சேர்ந்து வாழ்வதாக ஷாலினிக்கு தெரியவந்துள்ளது.

தன்னை காதலிப்பதாக நம்ப வைத்து ஏமாற்றியதோடு, சின்னத்திரை வாய்ப்புகள் இல்லாமல் செய்த காதல் கணவரை பிரிந்து விட்டதை ஊருக்கு பகிரங்கமாக அறிவிக்கும் விதமாக டைவர்ஸ் போட்டோ ஷூட் ஒன்றை செய்த ஷாலினி அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பி உள்ளார்

தன்னை 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய கணவரின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், புகைப்படங்களை கிழித்தும் , கையில் உற்சாக பான பாட்டிலுடனும் தனது விவாகரத்து அறிவிப்பை போடோ ஷூட் நடத்தி கொண்டாடி உள்ளார் ஷாலினி என்கின்றனர் அவரது உறவினர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments