சூடானில் இருந்து இதுவரை இந்தியர்கள் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு..!

சூடானில் இருந்து 102 வயது முதியவர் உள்ளிட்ட இந்தியர்கள் 2 ஆயிரத்து 500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, சூடானில் இந்தியர்கள் 2 ஆயிரத்து 800 பேர் தங்கி இருந்துள்ளனர்.
இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டவர்களில் இருவர், 102 மற்றும் 90 வயதை தாண்டிய முதியவர்கள் என்றும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது. எஞ்சியவர்களையும் விரைவில் அழைத்து வர நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
Comments