ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. வெளியானது கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை

0 1340

கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, 16 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

அதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும், யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தலா ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளன.

உயர்மட்டக்குழுவின் பரிந்துரைகளின்படி பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது, மூத்த குடிமக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை செய்வது உள்ளிட்ட வாகுறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடல் ஆகார கேந்திரா திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படும், வீடற்றவர்களுக்கு 10 லட்சம் இலவச வீடுகள் போன்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments