தமிழகத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் காயம்!

0 895

தமிழகத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில், தேனீக்கள் கொட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

திருப்பத்தூரில் பசலிக்குட்டைப் பகுதியில் இறந்தவர் ஒருவரின் காரியத்திற்காக கோயிலுக்கு சென்றவர்களை மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் ஈட்டியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு தேன்கூட்டின் மீது பட்டதால், அதிலிருந்த வெளியேறிய தேனீக்கள் கடித்ததில் சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்பட்டி கிராமத்தில் உள்ள காட்டம்மன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பொங்கல் வைத்தபோது அதிலிருந்த புகை காரணமாக கூட்டிலிருந்த தேனீக்கள் வெளியேறி கொட்டியதில் 4 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments