மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை..!

0 1665

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மணிகண்டன் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று சுவேதாவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று சுவேதா கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

5 மாத கர்ப்பிணியான சுவேதாவின் உடல் கரையொதுங்கிய நிலையில், தனது கணவருக்காக சுவேதா உருக்கமாக எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments