பள்ளி பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென மயங்கிய ஓட்டுநர்... சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய 7ம் வகுப்பு மாணவன்..!

0 3003

அமெரிக்காவில் பள்ளி பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மயங்கியதால், 7ம் வகுப்பு மாணவன் பேருந்தை நிறுத்தி சக மாணவர்களை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை மிச்சிகனில் 66 பள்ளி மாணவர்கள் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நடுவழியில் அசெளகரியத்தை உணர்ந்த பெண் ஓட்டுநர், தனக்கு உடல்நலம் சரியில்லாதது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு திடீரென மயக்கமடைந்தார்.

இதையறிந்து பேருந்திலிருந்த மாணவர்கள் கத்திக் கூச்சலிட்ட நிலையில், சமயோஜிதமாக செயல்பட்ட 7ம் வகுப்பு மாணவன், பேருந்தை நிறுத்தி சக மாணவர்களை காப்பாற்றினார்.

துரிதமாக செயல்பட்டு சக மாணவர்களை காப்பாற்றிய, மாணவன் Dillon Reeves - ஐ பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments