ஜூன் 5ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகை

கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 5-ஆம் தேதி சென்னை வருகிறார்.
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஜூன் 5-ஆம் தேதி சென்னை வர ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் விடுத்த கோரிக்கையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக அரசு கூறியுள்ளது. முன்னதாக டெல்லி சென்ற முதலமைச்சருக்கு தமிழ்நாடு இல்லத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
Comments