குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பீடிக்கடைக்கு வேலைச்சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பீடிக்கடைக்கு வேலைச்சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே மாயமான சிறுமி காருக்குள் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளக்கால் புதுக்குடியைச் சேர்ந்த கனகா, தனது 7 வயது மகள் சரண்யாவை வீட்டில் விட்டு பீடிக்கடைக்கு வேலைக்குச் சென்றார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் தனது மகள் இல்லாததால் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தேடினார்.
6 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சடலமாக கிடந்த சிறுமி சரண்யாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாப்பாக்குடி போலீசார் சிறுமியின் சடலத்தை பிணக்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிறுமியின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments