7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் காயம் - 12 வாகனங்கள் சேதம்

0 1374
7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் காயம் - 12 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

மும்பை - புனே விரைவுச்சாலையில் கோபோலி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. டிரக் ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் கார் மீது மோதிய நிலையில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது.

இந்த விபத்தில் 7 கார்கள் உள்ளிட்ட 12 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விரைவுச்சாலையில் நேரிட்ட இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments