டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை

0 1358

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்தரப்பினருக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுக்காமல் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையுணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கான தொகுதிகளை முன்கூட்டியே வரையறை செய்யுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் அமித் ஷா வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments